நான்கு காசானாலும் நாணயமாய்ச் சம்பாதியுங்கள்

ஒவ்வொரு முறையும் அன்பு கனிந்த இறையச்சம், பண்பாடுடன் கூடிய தூய்மை எனும் இரண்டு நுரையீரல்களால் உங்களின் உயிர் மூச்சை வெளியே விடுங்கள்!
உடல் ஆரோக்கியம் மற்றும் நேர்மறை சிந்தனை கலந்த சுகாதாரமான வெளிக்காற்றை உள்ளிழுங்கள்!
பழுதடைந்த அழுக்கான எண்ணங்கள் அனைத்தையும் வெளிவிடும் மூச்சுக் காற்றுடன் வெளியேற்றுங்கள்!
தார்மீக தைரியம் மற்றும் நடைமுறை ஞானம் கொண்ட சக்திவாய்ந்த கண்களால் வாழ்க்கையை கூர்ந்து நோக்குங்கள்!
மௌனம் மற்றும் விழிப்புணர்வின் கூர்மையான இரு செவிகளுடன் மௌனத்தின் விழிப்புணர்வை கவனித்துக் கேளுங்கள்!
உண்மை நம்பிக்கை என்ற அழகிய இருகரங்களால் வாழ்வின் ஒவ்வொரு கனத்தையும் துதித்து வழிபடுங்கள்!
தைரியம் விடாமுயற்சி எனும் சக்திவாய்ந்த இரு கால்களால் வாழ்க்கையின் கவலை துன்பம் போன்ற ஒவ்வொரு பிரச்சினையையும் ஓங்கி உதைத்திடுங்கள்!
உங்களுக்கு அன்றாட வாழ்வு நல்கும் இயற்கை அன்னையை அதன் அனைத்து வடிவங்களிலும் துதித்து போற்றிடுங்கள்!
வாழ்க்கையின் கடமைகளை விருப்புடனும் நேர்மையுடனும் இருதயத்துடிப்பினைப்போல் தவறாமல் செய்து நிறைவேற்றுங்கள்! கம்பீரமான யானையைப்போல ஏற்றம் மற்றும் இறக்கம் நிறைந்த வாழ்க்கை எனும் பாதையில் நடந்திடுங்கள்!
பலன்பெறும் நோக்கத்தைச்சாராமல் உங்களுக்கு ஆன்மீக பலம்கொடுக்கும் சமுதாயத்தொண்டுகள் எவ்வளவு சிறிதாயினும் செய்து பலமடங்கு அமைதியும் மகிழ்ச்சியும் அடைந்திடுங்கள்!
பிறக்கையில் வெறும்கை இறக்கையில் வெறும்கை என்கிற வாழ்க்கையின் திறந்த ரகசியத்தை மனதில் கொண்டு ஒவ்வொரு நாளையும் கண்ணுக்குத்தெரியாத ஆனால் ஆன்ம உணர்வுக்கு புலப்படக்கூடிய தெய்வீகத்திற்கு அர்பணித்திடுங்கள்!

சிந்தனை செய்ய மறந்தாலும் சிரிக்க மறந்திடாதீர்கள்!
நன்மை புரிதலைத் தவிர்த்தாலும் தீமை புரியாதீர்கள்!
நான்கு காசே ஈட்டினும் நாணயமாக வாழ்ந்திடுங்கள்!
கொடுப்பதில் கிட்டும் தெய்வீகத்தை உணர்ந்திடுங்கள்!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (4-Mar-23, 4:33 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 23

மேலே