கண்ணீர் விடயாருளர் திருட்டு உலகமடா
நேரிசை வெண்பா
இருந்திறந்தான் எண்ணா இரங்குஞானி நீத்தாற்
பெரும்பூமி கண்ணீர் விடவும் -- விரும்பும்
அவர்வருகை எண்ணி மகிழ்வராம் வானோர்
எவருளார் யில்லையெத்தர் ஈண்டு
இவன் இருந்தான் என்பது தெரியாமல் வாழ்ந்து சாவார் பலரும்.
ஐயோ இவர் இறந்து பட்டானே என்றெண்ணி உலகு அழவும், அதேசமயம் வானோர் தங்களுக்கு ஒரு ஆத்மா கிடைத்து அது வருவதை எண்ணி மகிழவும் ஒருவன் வாழ அது சிறப்பு. ஆனால் இன்று கொள்ளைக்காரன் வீரப்பனை போன்றோர்க்கே கண்ணீர்
சிந்துகிறார். இது என்ன உலகமடா. ? இது நரகமடா !!!