நாட்டிற்கு தேவை யற்றவன்

உலகத்தொடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லா ரறிவிலா தார் (... குறள்.)

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையாய் வைக்கப் படும் (..... குறள்)

உலகம் ஒத்துக்கொண்ட கடவுளை இல்லை என்பவனை பேயாக்கி நிறுத்துங்கள் என்று வள்ளுவர் சொல்கிறார்.

வள்ளுவனைக் கொண்டாடி ஏற்குமிவன் அவர் குறளை எதிர்ப்பதை என்ன சொல்லப்?

ஆசிரியப்பா

அவனும் சாதி இல்லை என்பான்
அவனது வீட்டிலே சாதிநாய் பூனை
வளர்ப்பன் மதமும் இல்லை என்பான்
சாதி இல்லை என்றும் சொல்வன்
கடவுளர் இல்லை பொய்யே என்பான்
அடிப்பாய் செருப்பால் வேண்டாம் பயமே
இல்லை யானால்போ பரப்ப யார்நீ
வம்பாய் இல்லை யென்றிட யிவன்யார்
பேடியே உதவான்அந்த நாயைத்
தள்ளி வையும் தூரமே பிடிப்பு
கொள்கை யிலாதான் பொய்சொல் மேதாவி
பொல்லான் வஞ்சகன் உதவான்
பச்சோந்தி யேயவனும் நாட்டிற் குதவானே

எழுதியவர் : பழனி ராஜன் (6-Mar-23, 2:04 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 45

மேலே