ஒழுக்கம்
சிகரட் பிடிக்காதே தம்பி அதன்
தீப்புகை அசர்ந்தால் விரலைச் சுடும்
உள்ளே அனந்தமாய்ப் புகை இழுக்க
உள்ளே அது நுரை ஈரலைச் சுடும்
நாளாக அதுவே புற்றுநோய்த் தருமே
வேண்டாம் தம்பி உனக்கு இந்த
பண்டம் மது என்பர் இதன் பெயர்
குடிக்க முதலில் மதியை மயக்கும்
குடிக்க குடிக்க அதற்கே உன்னை
அடிமை யாக்கி வாழ்வை கெடுக்கும்
இன்னும் கலர்லையும் மாய்க்கும்
ஆவியே போக சாதி செய்யும்
இளம் வயதில் தம்பி உனக்கு
சீர்கெட்ட சில பெண்டிரின் சேர்க்கையும்
வேண்டா அது பாலியல் தொல்லைத்
தந்து உன்னை முன்னேற்றப் பாதையில்
இருந்து வழுவ வைக்க பார்க்கும்
'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும் '