இது முறையா

இயற்கையென்பது ஒரு
அரிய சொத்தெனவும்,
இயற்கை தான்
இறைவனென உணர்ந்து
ஆதிகால மனிதன்
ஆலயங்களைக் கட்டி
இறையாண்மையை உயர்த்தி
பெருமை கொண்டான்

இன்றைய மனிதனோ
இயற்கை வளங்களை அழித்துத்
தனி மனிதன்
தன் வளத்தைக் கூட்ட
தாவரங்களையும், மண்ணின்
வளங்களையும் அழித்து
சீரழிப்பது , சாவதற்கா ?
இல்லை எல்லாமும் அழியவா ?

கோடையில் நிலத்தடி நீர்மட்டம்
குறையும்போது
நீரின் தேவையை குறைக்க
இயற்கை இலைகளை உதிரச்செய்து
அகிலத்து உயிர்களைக் காப்பதை
உணர்ந்து பார்க்காத மக்கள்-நீரை
வீனாக்குவதைக் கண்டு
வெகுண்டெழுந்த பூமி

மண்ணில் வாழும் மக்களை
மண்ணோடு மண்ணாக்க
ஆட்டம் போட்டு அழிக்க
இறைவன் தறுதலாக
சிரியாவுக்கும் ,எதியோப்பாவுக்கும்
சென்று ஆடி அழித்ததில்
ஐம்பதாயிரம் உயிர்களுக்கு மேல்
அழிந்து போனது பெரும் வேதனை,
இறைவனுக்கு, இது முறையா?

எழுதியவர் : (7-Mar-23, 5:57 pm)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : ithu muraiyaa
பார்வை : 42

மேலே