சொர்க்கமும் நரகமும்
பொழுதுபோக்காய்
சுற்றித் திரிந்த
நாளெல்லாம் இப்போது
பொக்கிஷமாக
எந்தன் கைகளில்..
நினைவுகள்
என்னும் பெயரில்
என் மனதுக்குள்ளே
ஊடுருகிறது..
அழகழகாய் நகர்ந்த
நாழிகை எல்லாம்
இப்போது நரக வாசல்
போன்று காட்சியளிக்கிறது..
வலிகளை விட்டு
விடவும் முடியாமல்
தூக்கிக் கொண்டும்
சுமக்க முடியாமல்
நான் படும் வேதனை
என் என்று
நான் சொல்ல..