மெல்லிய தேன்சுவை மேவிடும் இதழாள் - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(விளம் 3 தேமா)

மெல்லின மலர்களை மென்மையாய்த் தீண்டும்
மெல்லென நகர்ந்திடும் மேற்றிசைக் காற்று!
மெல்லிய தேன்சுவை மேவிடும் இதழாள்
சொல்லிலே விளங்குமே தூய்தமிழ்ப் பாக்கள்!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Mar-23, 5:13 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 108

மேலே