ஆட்டி விட்டானோ
வலையில் சிக்கி
உயிருக்கு போராடி
வெளிவர துடிக்கும் மீனுக்கும்
வாழ வேண்டுமென்ற
ஆசையைத் தூண்டிவிட்டு
துடிக்கவிட்டதும்—நாம்
தொழுது வணங்கும்
இறைவன் தானே !
மண்ணில் பிறக்க வைத்த
மாயவன் , தன்னை
மறக்காமல் துதிக்கவைத்து
வாழவைத்த மக்களைத்
தூங்க வைக்க
தொட்டிலை ஆட்டியதுபோல்
ஆற்றையும், பூமியையும்
எதியோப்பாவில்
ஆட்டி விட்டானோ !