அர்ச்சனை
நித்தம் நித்தம்
தெய்வத்திற்கு
"அர்ச்சனை"தான்
சந்தேகம் வேண்டாம்....!!
மனிதர்களுக்கு
பிரச்சனை வந்தால்
தெய்வத்திற்கு
தங்களின் வசவுகளால்
"அர்ச்சனை" செய்கிறார்கள்...!!
பிரச்சனைகள்
முடிவுக்கு வந்தால்
பால், பழம், பூக்கள் கொண்டு
மனிதர்கள் மனம் விரும்பி
தெய்வத்திற்கு
"அர்ச்சனை" செய்கிறார்கள்....!!
--கோவை சுபா