நீயும் கவிதை எழுது

நேரசை என்றால் என்ன ?


நேரிசை வெண்பாக்களால்


யாப்பின் நிரைநேரை கற்பீர் முதன்முதலில்
காப்பாம் அதுவே தனிக்குறில் -- சேர்ப்பாய்
அதனுடன் ஒற்றும் தனிநெடிலும் ஒற்றும்
அதனுடன் நேரசை யாம்


நேர் அசை

க, கல், கா, கால் , இவை நேரசை ஆகும்


நிரையசை என்றால் என்ன. ?


குறிலுடன் மற்றோர் குறிலும் அதன்பின்
குறிப்பாக சேர்த்திட ஒற்றும் -- அறிவாய்
நிரையாம் குறில்நெடிலும் பின்னு முடனே
விரைந்ததோர் ஒற்றையும் சேர்

நிரை அசை
அணி, அணில் , தடா, தடால்தொடரும்

எழுதியவர் : பழனி ராஜன் (18-Mar-23, 9:21 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 87

மேலே