இராமனை துதிப்போம்

இராமனை துதிப்போம்

அடைக்கலம் புகுந்தவருக்கு அபயம் தரும் உள்ளம்
ஆருயிர் துணையை தூக்கிச் சென்ற அரக்கனை நோக்கி
இன்று போய் நாளை வா எனக் கூறிய வீரத்தின் உருவம்
ஈசனுக்கு கையினால் வடிவம் கொடுத்து தொழும் பக்தி
உள்ளத்தின் தூய்மையும் முகத்தில் புன்னகையும் ஏந்தி
ஊனின்றி வனங்களில் நடந்த போதும் வாய்மை காத்து
எந்த நிலையிலும் மனம் தளராமல் இருந்த மனித தேவன்
ஏங்கிய முனிவர்களுக்கு காவல் நின்ற கருணை வடிவம்
ஐம்புலனையும் அடக்கி பிதுர் வாக்கை பரிபாலித்த மகன்
ஒரே அம்பு ஒரே மனைவி ஒன்றே செயல் என வாழ்ந்து
ஓங்கி வளர்ந்த அரக்கர் கூட்டத்தை வேரறுத்து உலகம் காத்து
மனிதர்களுக்கு எடுத்து காட்டாக வாழ்ந்து காட்டிய திருமால்
அன்னாரை வணங்கி துதிப்போம் இந்நன்நாளினிலே.

எழுதியவர் : கே என் ராம் (18-Mar-23, 1:06 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 31

மேலே