வாடி பேரழகி

வாடி பேரழகி
வனப்பு மிஞ்சும் வடிவழகி,

ஒய்யார நடை கொண்டு
ஒளிந்தது போதுமடி,

முன்னே வந்து நின்று விடு முழுவதுமாய் தந்துவிடு

கார் முகிலன் கருத்து விட்டான் காத்து கிடந்து,

கதிரவனும் அயர்ந்து
காணாமல் போய்விட்டான்
உனைக் காணாமலே,

ஆயினும் நான் உள்ளம்
தவித்தேனடி

உணவு தவிர்த்தேனடி
உணர்வு கொண்டேனடி

உறுதி பூண்டேனடி,
உனைதனை யேக்காண

நின்னழகினைக் பருகிட ...
நித்தமும் நினைத்து

பகல் அகலிட இரவுக்கு
இறக்கை முளைத்து வர

வான் வீதியில் வெறுமை வாசல் தெளிக்க விண்மீன்கள் கோலமிட

விண்வெளியில் திருவிழா
தினம் தினம் ஓரு விழா

நிலமகளும் நாணும் பேரழகி
நங்கை அவள் நடந்து வருவதற்கு

அச்சாரமாய் வெள்ளி எனும்
விடிவெள்ளி ஊர்ந்து வர

ஒளி வெள்ளம் ஓங்கிட அதில் ஒரு
கீற்று எமைத் தாக்கிட

வந்தாள் வடிவழகி வான் நிறைந்த
ஒளியழகி முழுநிலவாய் ...

அள்ளித்தின்றேன் அவள் அழகை

கொஞ்சி மகிழ்ந்தேன்
குமரியே நின்வனப்பையே...

யென்ஏக்கம் தீர்ந்தடி ..
நின் அழகில்
எழத மறந்தேனடி

எழுத்து. காம் இல்.
உனை நினைத்து
நான் வடித்த கவி மறந்து...

எழுதியவர் : பாளை பாண்டி (19-Mar-23, 6:39 am)
சேர்த்தது : பாளை பாண்டி
Tanglish : vaadi peralagi
பார்வை : 354

மேலே