சிலைமேனிப் பாவை விடியலில்நீ வந்தாய்

பலபலஎன விடியும் காலைப் பொழுதில்
சலசலத்து சந்தம் பாடியோடுது நீரோடை
சிலவண்ணப் பறவைகள் கீதம்பாடிப் பறக்குது
புலர்வான் சிவந்து செங்கதிர் விரித்திட
சிலைமேனி சித்திரமாய் நீவந்தாய் விடியலில்
அலைமோதுது ஆயிரம் கவிதைகள் நெஞ்சினில்

பலபலஎன விடியும் காலைப் பொழுதில்
சலசலத்து சந்தம் பாடியோடுது நீரோடை
சிலவண்ணப் பறவைகள் கீதம்பாடிப் பறக்குது
புலர்வான் சிவந்து செங்கதிர் விரித்திட

சிலைமேனிப் பாவை விடியலில்நீ வந்தாய்
அலைமோ துதுநற் கவிதைகள் நெஞ்சில்
கலையெழில் மீன்விழி யே

எழுதியவர் : கவின் சாரலன் (19-Mar-23, 8:38 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 40

மேலே