காதலில் நீ பார்த்தால்

பூவிதழ் புத்தகம் திறந்தால்
----புன்னகை எனும் கவிதை
பூமலர் விழிகள் திறந்தால்
----புலர்காலை எனும் கவிதை
கார்குழல் காற்றில் ஆடினால்
-----இரவு எனும் கவிதை
காதலில் நீ பார்த்தால்
-----மாலை எனும் கவிதை

எழுதியவர் : கவின் சாரலன் (19-Mar-23, 9:16 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 59

சிறந்த கவிதைகள்

மேலே