கவிதை

🚩கவிதை😴😴😴
"""""""""""""""""""""""""
மூன்றெழுத்து மூச்சு;
மரணந்தாண்டும் வீச்சு...
மண்ணில் விதைத்து
விண்ணில் விளையும்
நட்சத்திரங்கள்...
மழலையின் சிணுங்கல் ;
சிறுவரின் வியப்பு ;
இளையோரின் காதல் ;
நடுவரின் புரட்சி ;
முதியோர்க்கோ கண்ணாடி...
சில பிச்சைகள் ;
சில இச்சைகள் ;
சில எச்சைகள் ;
ஆனாலும்
தேவைகள்...
சிலருக்கே கைவரும் ;
பலருக்கு பொய்வரும் ;
படிப்பவர்க்கோ புகைவரும் ;
என்பதான
விரவுகள்...
சொர்க்கத்தின் தண்டனைகள் ;
நரகத்தின் மன்னிப்புகள் ;
ஆம்
இவ்வுலக யதார்த்தங்கள் ;
அவ்வுலக நியாயத்தீர்ப்புகள் ;
மொத்தத்தில்
தராசுக்கள்...
ஆக
கவிதை படைத்தல்
கலை...
நானொன்றும் கவிஞனில்லை,
ஆனாலும் சமைத்திருக்கிறேன்...
கண்கள் விரிய
விருப்பமிடுங்கள்....
இதயம் தொட்டால்
பின்னூட்டமிடுங்கள்...
உயிரில் உறைக்க
பகிருங்கள்...
தவறென்றால
தட்டுங்கள்...
திமிரென்றால்
குட்டுங்கள்...
ஏதேனும்....
--------------------------------
👑 ராஜூஆரோக்கியசாமி
--------------------------------
கவிதை தின வாழ்த்துக்கள்!

எழுதியவர் : (21-Mar-23, 11:24 am)
சேர்த்தது : RajuArockiasamy
பார்வை : 57

மேலே