உயிரே உனக்கும் வாடகையா
நேரிசை வெண்பா
கருப்பை சினைமுட்டை அங்கதில் விந்து
உருவாக்கும் பாய்ந்து முயிராம் -- கருவே
உடலங்கு தங்கு முயிர்வா டகையாம்
கொடைத்தாய் குருதிப் புனல்
நேரசை ஆசிரியப்பாக்கள்
உயிர்தங்க புத்துடல் கேட்கும் வாடகை
உயிர்வாழ தாய்தருவள் தன்குருதி அன்றே
கருப்பை கேட்ட தில்லை வாடகை
ஒருநாளும் தாயன்பே பெரிதாம்
பாரன்றே தாயுடை கருணை போற்றே
பிறந்த அன்றே வாடகை கொடுவென
பாலைக் கேட்டுடல் அழுதது குடிக்கும்
உயிரும் நிலைக்க என்னவெல் லாமதுண்ண
உணவையும் தரக்கேட்டு உடலும் தின்னும்
தின்ப தெல்லாம் வாடகைத்தான் உயிர்வாழ
உடலும் தின்றிடும் பலதையும் குடிதிடும்
உடல்சுகம் அனுபவிக்க அலைந்து கெடுமே
உயிரும் தங்க உடலது பலதை
கேட்கும் வாடகையாய் குடித்து ருசித்து
சுகித்துமே அழியும் வாடகை
உடலும் பின்யென்ன உயிரது பறந்துபோமே