கண்களிற் காணுங் காட்சி - அறுசீர் ஆசிரிய விருத்தம்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
கண்களிற் காணுங் காட்சி
..கவிதைகள் மலரச் செய்யும்;
பண்களிற் பாடும் பாடல்
..பைந்தமிழ் மொழியைப் பாடும்!
விண்ணிலே தோன்றுங் காட்சி
..விந்தைக ளுரைக்குஞ் சாட்சி;
பண்புடன் வாழ்த லொன்றே
..பாரினி லின்ப மாகும்!
- வ.க.கன்னியப்பன்