மெல்லத் திறந்தது மீன்களாய்க் கண்களும் - கலித்துறை

கலித்துறை
(மா விளம் விளம் விளம் காய்)

செல்லும் பாதையில் சேலெனக் கண்களை
..விரித்தனையே;
மெல்லத் திறந்தது மீன்களாய்க் கண்களும்
..மேன்மையென
வெல்லும் மனந்தனில் வேட்கையும் பெருகிட
..நீநுழைந்தாய்;
மெல்ல அசைந்திடும் மேட்டிமை விழிகளுங்
..மிளிர்ந்தனவே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Mar-23, 10:15 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

மேலே