வரம்பு மீறிடும் வஞ்சிப்பா
நேரிசை வெண்பா
வெண்பாவும் ஆசிரியப்பா வெல்லாம் காய்ச்சீரை
திண்ணமாய் தாண்டிடா நின்றிடும் -- தண்நிழல்
வஞ்சியி லுங்கனி கலிப்பாவில் அங்கேவந்து
கொஞ்சும் மறைவிலா நோக்கு
குறள் வெண்பா
ஓரசைச்சீர் வஞ்சிப் புகுந்து கெடாமாறும்
பார்யென் பவறிஞ்சர் யாப்பு
வஞ்சியில் ஒரசை புகுதல் உதாரணம்
வஞ்சி விருத்தம்
உரிமை யின்க ணின்மையால்
அரிமதர் மழைக் கண்ணாள்
செருமதி செய் தீமையாற்
பெருமை கொன்ற வென்பவே
இந்த வஞ்சி விருத்ததில் இரண்டாவது வரியில் இரண்டாம் சீர் மழை என்ற ஒரசை வந்துள்ளதைக் காண்க
மூன்றாமடியில் இரண்டாஞ் சீரைப்பாருங்கள் செய் என்ற ஒரசை சீர் வருகிறது யாப்பின் உரை ஆசிரியர் இதற்கு அளிக்கும் விளக்கம் இதுவே மழை என்பது நிரை அதை நிரை நிரை விளமாக கொண்டும் செய் என்பது நேர் ஆதலின் நேர்நேர் தேமாவாகக்
கொள்ளவும் என்கிறார். ஆகையால் ஓரசை என்பது தவிர்த்த அசையாகும்..
இது தவிர விஞ்சிப் பாக்களில் பலதில் மூன்றாஞ் சீரிலும் சரி
இரண்டாம் சீரிலும் முதல்சீரிலும் கூட எல்லா அடிகளிலும்
பூச்சீர்கள் நிழல் சீர்கள் தண் நிழல் சீர்களும் சரளமாக கையாளப்
படுதலை வழக்க மாகக் கொண்டுள்ளார்கள்...
விவரத்திற்காக இங்கு விளக்கியுள்ளேன் படித்தறியுங்கள்...
நாலசைசீர் கொண்ட வஞ்சிப் பாக்கள்
இலங்சாமரை எழுந்தலமர
நலங்கிளர்பூமழை தனிசொறிதர
இனித்திருந்
தருணெரி நடாத்திய வாதித்தன்
திருவடி பரவுதுஞ் சித்திபெறர் பொருட்டே
மேலிரண்டு அடிகள் வஞ்சிச் சீர்கள்
இலஞ் சா மரை
நலங் கிளர் பூ மழை == நான்கசை சீர்கள் கருவிளந்தண்நிழல்
இப்படி அசாத்திய பொதுச்சீர்கள் 12 ம் வருமென காட்டியுள்ளது