பொன்மேனி ஓவியமாய் நீ
தென்பொதிகைத் தென்றலில் ஆடிடும் தேன்மலர்கள்
பொன்னந்தி மாலைக் கிரணங்கள் மலர்தழுவ
சின்னயிடை அசையபொன் மேனிஓ வியமாய்நீ
என்னுள்ளே கவித்தமிழ் தென்றலாய் வீசுதடி
தென்பொதிகை தென்றலில் ஆடிடும் தேன்மலர்கள்
பொன்னந்தி மாலைக் கிரணங்கள் பூவருட
சின்னயிடை பொன்னோ வியமாய்நீ யும்முன்னே
என்னுள் கவிதைத்தென் றல்
---நாற்சீர் கலிவிருத்தம் இன்னிசை வெண்பாவாக