அவர்கள் யாரோ ஒருவர் தான்
அவர்கள் நமக்கு
தெரியாத முகங்கள் தான்...
அவர்கள் நமக்கு
உற்ற உறவுகளும் இல்லை தான்...
அவர்கள் நமக்கு
அயலவர்களும் இல்லை தான்...
அவர்கள் நமக்காய்
துடிப்பவர்களும் இல்லை தான்...
ஆனாலும் அவர்கள் நம்
மனதின் கணத்தினை
அதிகப்படுத்திவிடுகிறார்கள்...
அவர்களுக்காய்
எம் இதயங்களும் துடிதுடித்துவிடுகின்றன...
அவர்களுக்காய்
எம் விழிகளும் விழிநீரை
சிந்திவிடுகின்றன...
அவர்களுக்காய்
எம் உள்ளமும் கரங்களும்
பிரார்த்தித்துவிடுகின்றன...
இவையெல்லாம் நடக்கின்றன நாம் இறைவனின் அடியார்கள் என்ற ஒன்றுக்குள்ளே அடங்கிவிடுவதனால்...
இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா