மானென்றேன் துள்ளி மறைந்தாய் Dr கன்னியப்பர்க்கு

பாவலரே இது உங்களிn மாதிரிப் பாடல்

மேன்மையாய்ப் பாடலொன்றை மேட்டிமைச் சொற்களைத்
தேன்போலத் தேர்ந்தெடுத்துத் தித்திப்பாய் – ஊன்றுகோல்
போல்பற்றி உள்மனம் போற்ற உவப்புடன்
சேல்விழி யாளே,நீ செப்பு!

உங்கள் வேண்டுகோள்படி எனது பாடல்


மானென்றேன் துள்ளி மறைந்தாய் புதர்நுழைந்து
தேனென நான்வரநீத் தீயென்றாய் -- நானென
வேல்கொண்டு பாய்ச்சுவதென் வெள்ளி நிலவழகே
சேல்விழி யாளேநீ செப்பு!



..........

எழுதியவர் : பழனி ராஜன் (29-Mar-23, 11:53 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 36

மேலே