244 தீராத வருத்தத்திற்கும் பழிக்கும் புகலிடம் சூதே – சூது 8

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்;
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12 எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு.
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

பந்த யந்தனைப் பற்றிவெஞ் சூதினோடு
எந்த ஆடற் கெனினும் இயைபவர்
வந்த சீர்நல மாறிவ யாவுக்கு
நிந்த னைக்கு நிலையம தாவரால்! 8

- சூது
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”பந்தயப் பொருளை விரும்பி தீமை பயக்கும் சூதாட்டம் ஆடுவதுடன் வேறு எந்த விதமான தவறான செயல்களுக்கும் இணங்கும் சூதாடுபவர்கள், அவர்கள் பெற்ற மேன்மையான நன்மை எல்லாம் நீங்கி வருத்தம், பழி முதலியவற்றிற்கு உறைவிடம் ஆவர்” என்று சூதினால் ஏற்படும் விளைவுகளைக் கூறி அறிவுறுத்துகிறார் இப்பாடலாசிரியர்.

சீர் - மேன்மை. வயா - வருத்தம். நிந்தனை – பழிச்சொல், நிலையம் - உறைவிடம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Apr-23, 7:52 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

சிறந்த கட்டுரைகள்

மேலே