காதல் நெஞ்சம் 💕❤️

எண்ணங்கள் அலை மோதுகிறது

எழுத்தணி கைதேடுகிறது

என்னவளை வர்ணிக்க மனம்

துடிக்கிறது

தூக்கம் வராமல் தவிக்கிறது

தூவும் வானம் பிடிக்கிறது

கொலுசின் ஒசை ரசிக்கிறது

கண்ணாடியில் அவள் முகம்

தெரிகிறது

என் கண்மணி அவளை பார்க்காமல்

நெஞ்சம் வலிக்கிறது

நிலவும் கூட சூடுகிறது

காதல் வந்தால் எல்லாம் புரிகிறது

எழுதியவர் : தாரா (2-Apr-23, 12:03 am)
சேர்த்தது : Thara
பார்வை : 273

மேலே