துணையாக வருவது உன் முகம் தானடி 555
****துணையாக வருவது உன் முகம் தானடி 555 ***
என்னுயிரே...
அலைகள்
வந்து போனதும்...
நீ பதித்து சென்ற
பாத சுவடுகளை...
நான் தொடுமுன்னே
அலைகள் அள்ளி சென்றன...
நீ துயில் கொள்ளும்
அழகைக்காண...
தினம் தினம்
முந்திக்கொள்கிறது இரவு...
நான் உன்னை எப்போது
காண்பது என்னருகில்...
என்னை மறந்தாலும் உன்னை
நினைக்க வரம் வேண்டும்...
பூங்கொடி அருகே இருக்கும்
புற்களை போல் இல்லாமல்...
தொலைவில்
நான் இருந்தாலும்...
உன்னைத்தேடி வரும்
வண்டாக இருக்க ஆசை...
விழிகளில்
பிம்பமாய் நீ இருக்க...
மறந்தாலும் உன்னை மட்டும்
நினைக்கும் வரம் வேண்டுமடி...
நான் துயில்
கொள்ளாத இரவுகளில்...
எனக்கு துணையாக வருவது
உன் பூ முகம் தானடி கண்ணே.....
***முதல்பூ.பெ.மணி.....***