பரமபத பாம்பு
புகழைச்சிறு புன்னகையுடன் கடந்துவிடு
புகழ்ச்சியை புழுவாய் மதித்திடு
பாருக்கெல்லாம் பகலவனாய் மாறிடு,
பாந்தமாயுன் பண்பு பரவிடும்.....!!!
மாறாய் மயங்கினால் மதிவிடுபடும்,
முதலாக மங்களமது மங்கிடும்,
மாசற்றமனம் மாற்றுக் குறைந்திடும்
மாண்பு மங்கி மறைந்திடும்....!!!
செதுக்கிய சிந்தை சிதைந்து
செருக்கு சிரமேறி சீர்குலைக்கும்,
செந்தழல்பற்றி சீராய் சிதிலமாகுமுன்
சிலந்திவலை! சுற்றமும் சீர்கெடும்....!!!
பழகிய பந்தமே பதிங்கிடும்
பாராமல் பார்க்கும் பார்த்தவுடன்
பல்வழியில் பார்த்துப் பார்த்து
பதமாய்வளர்த்த பெயர் பல்லிளிக்கும்....!!!
புகழில் புல்லரித்து போனால்
பின் புன்படுவுன் புன்னகை,
புதைகுழி பறித்துநீயே படுத்துவிடு
புகழொரு பரமபதப் பாம்பு....!!!