நீரோடையில் இவள் நின்றால்

நீரோடையில் இவள் நின்றால்
---நீரோடை இன்னும் துள்ளி ஓடும்
நீரோடையில் துள்ளும் மீன்கள்
---இவள் விழிக்கயலில் பொறாமை கொள்ளும்
நீரோடையில் இவள் குனிந்து
-----நீரருந்தும் போது
நீரோடையில் ஓடும் நீரினில்
---இவள்கருங் கூந்தல் நீராடும்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Apr-23, 10:37 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 83

மேலே