கலியுக கண்ணகி
காலங்கள் மாறியது, ஊடகங்கள் பெருகியது
வேஷங்கள் பெருகிடவே, மோசங்கள் தொடங்கியது
அகத்தின் அழகு , ஏது முகத்தில்
அலைபேசி அழைக்குது, முகமூடி தளத்தில்
நல்லவன் நான், விற்பனை செய்திட
கெட்டவனும் தான், திமிராய் திரிந்திட
ஆபாசம் அலைமோதி, அந்தரங்கம் திரையிட
பெண்மை எல்லாம், பேசும் பொருளாக
உருவ கேலி, வலைத்தளங்களை கடக்க
பொத்தான்கள் எல்லாம், பித்துக்கள் ஆக
திருமணம் முடிந்தும், சுகம் தான் தேடி
கையளவு கைபேசியில், காதல் தான் நாடி
உயிர்க்கொலை ஓராயிரம், மண்ணோடு பல்லாயிரம்
மனிதம் தான், மாண்டது மிச்சம்
உடல் சுகம், உயிரை குடிக்க
மதிப்பிழந்து உயிர்கள், துடியாய் துடிக்க
கள்ளக்காதல் என, பெருமை பேச
ஊடங்கங்கள் காதுகளில், செய்தியை ஓத
திரை மறைவில், தெரியாமல் செய்கிறேன்
உன் முகம் மட்டும் மறைத்து
எல்லாம் நான் காண்கிறேன் மறந்தாயோ
இப்படி அலைபாயும், கலி உலகில்
செத்தாலும் என்னவளை, என்னவனை மறவேன்
என்று வாழும் சிலரால் சுழல்கிறது பூமி
இப்படிக்கு நாங்கள் -
கலியுக கண்ணகி (ஆண்கள் மற்றும் பெண்கள்).