ஊடலும் கூடலும் சாடலும் சக்கரை வாசன்

ஒரு விகற்ப நேரிசை வெண்பா

பாட லதைசரியாய் பாடாரை சாடருமை
நாடலும் யாப்பை நலமன்றோ -- கோடதை
கூட எழுதவே கூடார்க்கு ஊடலென்
நாடப் புனைப்பிறர் நன்று

நீ எழுதும் பாட்டை பிறர் நாடப்புனை. என்பதாம்

ஒரு விகற்ப குறள் வெண்பா

கற்றவர் காமுறுவர் கற்றவரை கேட்டிலையோ
அற்பமல்ல யாப்பு அறி

சக்கரை வாசனார் எழுதிய கீழ்க்கண்ட பாடலை
நானும் நேரிசை வெண்பா வாக்கினேன்

பாடலும் அதனிடை சாடலும் அருமையே ;
ஊடலும் அதுவழி கூடலும் இயற்கையே ;
நாடலும் ,யாப்பினில் நல்லதோர் பாடலும் ,
கோடிடும் எழுத்தினில் கூட்டுமே அழகே


....

எழுதியவர் : சக்கரை வாசன் (12-Apr-23, 5:02 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 26

சிறந்த கவிதைகள்

மேலே