குற்றம் குற்றம் குற்றமே
நேரிசை ஆசிரியப்பா
கம்பன் கவிநயம் எவராம் சொல்ல
சும்மா கம்பனை இழுப்பர் வம்பு
கம்ப இலக்கியம் இலக்கணம் அறியார்
கம்பனை பழித்தால் திண்ணமே நரகு
மண்டை சொன்னதை மளமள வெனவும்
தட்டிட கவிதை யாமோ ஆகா
ஆய்ந்து கம்பன் செய்த செய்யுள்
ஆயாது குறையேன் பேசல்
நன்றன்று குற்றம் குற்றம் குற்றமே
கம்பன் எழுதிய பாட்டை குறை சொல்ல யாருண்டு
புரியவில்லை என்றால் அடுத்த பாட்டுக்கு தாவுதல் நன்று.
அதைவிட்டு கம்பன் எழுதியது சரியில்லை என்று விளக்க
முற்படுவது சரியல்ல. கம்பர் இராமாயணத்தை
அரங்கேற்ற இந்திய கண்டம் முழுக்க அங்கங்கே
ஒடித்திரிந்து அரங்கேற்றம் செய்த கதை வெகு
சுவாரஸ்யமானது .. அவர் எழுதியதை அன்றைய
தமிழ் மதுரை வடக்கின் பெரும்புலவர் எல்லோரும்
ஏற்ற பெருங் காவியம். ஆகவே கம்பனை பேசும்போது
நாவை சற்று அடக்கிப் பேசல் வேண்டும்..
....