கண்ணன் சேயாகி தாய் என்னைக் குளிரவைத்தான் கண்ணன் கீதம்

கண்ணன் எந்தன் கவிதையின் நாயகன்
கண்ணம்மா என்றானேன் நான் எந்தன்
கண்ணனைக் கட்டி தழுவி முத்தமிட
எனக்குள் ஆசை அதைப் புரிந்து
என்னை ஆட்கொண்டான் என்கண்ணன்
அவனே என்னைக் கட்டிக்கொண்டான் ஒரு
குழவிபோல் சிரித்துக்கொண்டே என்முகம்
முழுவதும் நனைத்து முத்துமாரி
பொழிந்தான் பேரின்பத்தில் என்னை ஆழ்த்தி
மாயன் கண்ணன் என்னை தாயாக்கி
சேயாய்த் தான் மாறி என்னை ஏற்றினானே

எழுதியவர் : வாசவன்=தமிழ்பித்தன்-வாசுதேவன் (16-Apr-23, 1:19 pm)
பார்வை : 30

மேலே