கவிதை என்றால் என்ன
கவிதை ...!
எண்ணங்களை எழுத
வார்த்தைகளை எடுத்து
வரிகளாக வார்த்தெடுத்து
வாய்மையில் தோய்த்து
பொய்மையைப் பிரித்து
அலங்கார தோரணமாக்கி
அகங்காரம் கலந்திடாது
கூறுவதை கூர்மையாக
நேரிடையாக நேர்மையாக
சமத்துவப் பார்வையுடன்
சமுதாயம் உணர்ந்திடும்
அளவில் வகைப்படுத்தி
வன்மையை மென்மையுடன்
வடிக்கும் தொகுப்பே
கவிதை என்பதாகும் !
எவரும் எழுதலாம்
கவரும் வகையில் !
வாசிப்பவர் புரிந்து
யோசிக்க வைத்திட !
சீர்திருத்தம் மலர
சீர்மிகு கவிதைகள்
படைத்திட வாருங்கள் !
பழனி குமார்
20.04.2023