கண்ணா உன்மீது எனக்கு மீளாக் காதல்
உன்மீது எனக்கு அளவிலா காதல்
கண்ணா எந்தன் ஆரமுதே சேயாய்நீ
தவழ்ந்து வந்து என்னில்லத்தில் உறியில்
கட்டிவைத்த பானையில் உறைந்த தயிரை
குட்டிக் குழந்தையாய் நின்று நீ
எட்டி நின்று கைவிட்டு விட்டு
வாய் நிறைய பருகி கையெல்லாம்
வழிய சிரிக்கிறாய் மாய கண்ணனே
ஏன் இப்படி செய்கின்றாய் கள்ளனே
என்று கடிந்து கொண்டால் ஓட்டம்
எடுக்கின்றாய் பக்கத்துக்கு ஆய்க்குல பெண்டிர்
வீட்டிற்கு அங்கும் இப்படியே தயிர்த்திருட
எங்கே நீ என்று பார்க்கையில் என்கண்முன்
வந்து குந்தி உட்கார்ந்து கைகொட்டி
வாய்திறந்து நீ சிரிக்கும் சிரிப்பில்
மாயனே வாழ்வின் தத்துவமே மறைந்திருக்க
காண்கின்றேன் நான் .....கண்ணா கண்ணா
உன்மீது எனக்கு மீளாக் காதல்