கொண்டாட்டமும் திண்டாட்டமும்

கொண்டாட்டம் கொண்டாடிக் கொண்டதும் வாழ்க்கையில்
திண்டாட்டந் தானே தினம்.
*
தினந்தினமே தேதோ தினங்களும் தோன்றல்
சனங்களை ஏய்க்குஞ் சடங்கு
*
சடங்குகள் செய்தே சலித்திடு வாரை
முடங்கிடச் செய்யும் முட்டு
*
முட்டுக்கட் டைப்போட்டு முன்னேற்றப் பாதையில்
விட்டுவிட்டுத் தாக்கும் விசம்
*
விசமெனும் போதும் விடாமல் நம்மை
நிசமாய்த் தொடரும் நிழல்
*
நிழலெனத் தோன்றியே நீர்க்குமிழி யாகப்
பழகியப் பண்டிகைகள் பார்
*
பார்த்திடும் போது பரவச மூட்டியே
வேர்த்திடச் செய்யும் வினை
*
வினையிதை வைத்து விளம்பரம் செய்தே
பனைபோல் உயர்வார் பலர்
*
பலபேரின் வாழ்வை பரிகாச மாக்கி
உலவும் பெருநாள் உடும்பு
*
உடும்புப் பிடியாய் உவகையை யூட்டும்
கொடுங்கடன் பேய்க்கரங் கொண்டு.
*
மெய்யன் நடராஜ் .

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (23-Apr-23, 4:02 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 38

மேலே