புத்தகம் படிப்போர் இல்லை
நேரிசை ஆசிரியப்பா
கண்களன்று உறக்கம் கொள்ள மறுத்திட
கண்ணாய்த் தேடுவர் படிக்க புத்தகம்
புத்தகம் இல்லை யென்றிட விரிப்பர்
புத்தகக் கையகல விசிறி வீசி
சிந்தும் காற்றில் சிந்தை மயங்கி
விந்தையாய்த் தூங்கிப் போவார் இன்று
தூங்கப் புத்தகம் படிப்பதில்லை புத்தகக்
கைவிசிறி மறைந்து காணாப் போக
கூத்தும் கும்மாள மாக வாழ்கிறார்
இன்டர்நெட் நிழற்பட துணையால்
இனியெவர் புத்தகம் படித்துக் கிழிப்பாரோ
புத்தகம்=. நூல். புத்தகம் = மயில் பீலி. (தோகை)
......