கேரளத்து விஷு
கேரளத்து விஷு
புதுக் காலை கதிரவன் கதிர் கொண்டு புது வருடம் புலர்ந்திட
புது விடியலில் நம்மைக் கண்மூடிக் கைப்பிடித்து வழி நடத்தி
புதுப்பொலிவுடன் மங்களகரமாக நிறைய மஞ்சப் பூக்களுடன்
புது பாத்திரங்களில் நிறைவாக மஞ்சள் நிறக்கனிகளும் காய்களும்
புதுமையுள்ள பொன் நகைகளும் பொற்காசுகளும் அடுக்கி வைத்து
புலர்ச்சியில் அதன் முன் சென்று கண்விழித்து செழுமையுடன்
புதுத் துணியில் கிருஷ்ணனை வைத்து கண்குளிர காணுகையில்
புது ஆசைகளும் கனவுகளும் மனதுக்குள் தோன்றித் துளிர்விட
புது இலக்குகள் நிர்ணயித்து புதுத் தீர்மானங்கள் பல எடுத்திட
புதுமைகள் பல செய்ய உள்ளமும் மனமும் ஒன்றாகி விழைந்திட
புதுத் தெம்புடன் உள்ளமெல்லாம் பெரு மகிழ்ச்சி பொங்கிட
புதுப்பானையில் பொங்கிய புதுச்சோறும் மலர்ந்து சிரித்திட
புது மலர்போல் முகமெல்லாம் மலர மகிழ்ந்து கொண்டாடிட
புது வருடத்தை கேரள மக்கள் விஷு என அழைத்து வரவேற்று
உள்ளம் நிறை வாஞ்சையுடனே தன் மக்களுக்கு ஆசிர்வதிப்பது
புதுவருடம் நன்றாக வாழவைக்கும் என்ற ஒரு உணர்விலேயே