சன்னல் வழியே ஓர் சந்திரோதயம் கண்டேன்

சன்னல் வழியேஓர் சந்திரோத யம்கண்டேன்
தென்றல் கருநெடில் கூந்தல் தழுவிட
புன்னகை பொன்முகத்தில் பூக்கள் சொரிந்திட
பொன்னெழில்மா லையும்கண் டேன்


சன்னல் வழியேஓர் சந்திரோத யம்கண்டேன்
தென்றலும் கூந்தல் தழுவிட -- மென்னிதழ்
புன்னகை பொன்முகத்தில் பூக்கள் சொரிந்திட
பொன்னெழில்மா லையும்கண் டேன்

எழுதியவர் : கவின் சாரலன் (24-Apr-23, 10:08 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 50

மேலே