திறமையைப் பாராட்டுவோம்
இன்று தம்பி மெய்யன் நடராஜ் அவர்கள் முப்பது மரபுக் கவிதைகள் எல்லோரும் பாராட்டும் வகையில் எழுதியுள்ளார். அவருக்கு எழுத்து தளத்தின் சார்பாக நான் இந்த வெண்பாவை எழுதி அவரைப் பாராட்டுகிறேன்
விண்நீர் பொழிவையும் வீண்கடல் சேரா
அணைத்தேக்கு மாபோல் அணைத்தும் -- அணையொன்றில்
மெய்யன் நடராஜர் மெய்கவி தையேற்றி
செய்யோன் தயவினால் சேர்
அதிக மழைப் பொழிவின் நீரை கடலில் சேர்ந்து வீணாகி விடாது எப்படி அணையும் தேக்கி காக்கிறதோ அப்படி மெய்யன் நடராஜனின் கவிதைத் திறனை எல்லோரும் பாராட்டுவோம். முருகன் அவரின் புகழை வெளிப்படுத்திக் காக்க வேண்டுகிறேன்
...