சொற்புத்தி கேளீரே சொந்தமெனச் சிந்திப்பீர் - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(காய் 4)
குற்றேவல் செய்தெங்கும் குற்றங்கள் செய்யாது
நற்செய்கை என்றென்றுஞ் செய்துவரின் நலம்பெறலாம்!
நற்செய்தி சொல்லுகின்றேன் நானிலத்தில் உள்ளோரே
சொற்புத்தி கேளீரே! சொந்தமெனச் சிந்திப்பீர்!
- வ.க.கன்னியப்பன்