அன்பே

அழகே அமுதே
கனியே கனிவே
சுவையே சுகமே
மனதை வருடும்
மகிழ்வுக் காற்றே
அருகில் சென்று
அணைக்கத் தோன்றும்
நறுமணப் பூவே
அறுசுவை அழகே
அள்ளி எடுத்து
பள்ளி முடித்து
இன்றும் இனியும்
என்றும் கனியும்
அன்பை ரசிப்போமா?
பிட்டும் தேங்காயும்
பட்டும் நூலும் போல்
வாழ்வை நன்றாய்
வகைபட ருசிப்போமா?

எழுதியவர் : அஷ்றப் அலி (30-Apr-23, 7:02 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : annpae
பார்வை : 107

மேலே