ஒருசில சொற்கள் வைத்தே ஓட்டிடும் அழகன் நீயே - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

ஒருசில சொற்கள் வைத்தே
..ஓட்டிடும் அழகன் நீயே;
நெருடிடுங் கருத்தும் என்றும்
..நெஞ்சினில் நிற்ப தில்லை!
அரசியல் பேசி னாலே
..ஆவதும் ஒன்று மில்லை;
கருத்திலே கவனங் கொண்டால்
..காண்பதும் இன்பந் தானே!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-May-23, 11:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே