தேர்போல் அசைந்து வீதிவந்த தென்றலே

தோளில் புரளுது நீலநிறத் துப்பட்டா
தூரத்து நிலவு கூந்தலைத் தழுவிட
கார்மேக கூந்தல் காற்றில் ஆடுது
பார்க்கும் மின்னல் விழிகள் இரண்டும்
போர்க்கணை தொடுக்குது மாறனின் பாணம்போல்
யார்நீ வானத்து தேவதை ஊர்வசியோ
தேர்போல் அசைந்து வீதிவந்த தென்றலே !

எழுதியவர் : கவின் சாரலன் (3-May-23, 10:19 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 78

மேலே