கனவுகள் எழுதிய காதல் டைரி

அவளோடு நான் நடந்த மாலைப் பொழுதுகள்
அவளென் தோள்சாய்ந்து கதைபேசிய இளவேனில் காலங்கள்
நீலவிழி அசைய விடிய விடிய கவிதை சொன்ன நிலாப்பொழுதுகள்
பக்கம் பக்கமாய் எனது நாட்குறிப்பினில்....
அது
கனவுகள் எழுதிய காதல் டைரி !

எழுதியவர் : கவின் சாரலன் (3-May-23, 11:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 139

மேலே