கோடை வெயிலில் ஒரு முத்தம் 555
***கோடை வெயிலில் ஒரு முத்தம் 555 ***
உயிரானவளே...
கோடை வெயிலில் எதற்கு
கடற்கரை சந்திப்பு என்கிறாய்...
அழகே சுட்டெரிக்கும்
சூரியன்கூட சுகமாக இருக்கிறது...
நீ
என்னருகில் இருப்பதால்...
சுட்டெரிக்கும் சூரியனால் சொல்லாத
இடமெங்கும் வேர்க்கிறது என்று...
விரல்கூட பிடிக்காமல்
என்னோடு நடைபோடுகிறாய்...
உன் உளறல்கள் வெண்மேகத்திற்கு
கேட்டதோ என்னவோ...
வெண்மேகம்
கருமேகமாக சூழ்ந்து...
இப்போது
போட்ட தூறலில்...
நீயாக வந்து என்னை
கட்டிகொண்டாயடி...
மழைமேகமே உனக்கு எப்படி
சொல்வேன் உனக்கு நன்றிகள்...
எங்கள் பாதங்களை
தழுவி செல்லும்...
நீல
கடல் அலைகளே...
உங்கள் கடல்
தேவனிடம் சொல்லுங்கள்...
நீரால் நீங்கள்
கொண்டிருக்கும் ஆழத்தைவிட...
அன்பால் எங்கள்
காதல் ஆழம் என்று...
என்னை
கட்டியணைத்தது போதுமடி...
கொஞ்சம் கடல்நீரில் விழும்
மழைத்துளிகளை பார்...
நீ முத்தமிடும் சப்தம்
போலவே கேட்கிறது எனக்கு...
என் விழி அழகே...
கோடைவெயிலில்
முத்தம் தர உனக்கு சம்மதமா.....
***முதல்பூ.பெ.மணி.....***