இதயத்துக்குள்ளே போராட்டம்..//

மெல்ல மெல்ல
நகர்ந்தாலும்
இரவுகள் அழகாகிறது..//

உயிரற்ற தலையணை
தாங்குகிறது
வலிகள் உள்ள கண்ணீரை..//

நினைவு வெள்ளம் பெருக்கெடுத்தாலும்
இரவுகளுடன் மறைகிறது..//

இன்பமோ துன்பமோ
இதயத்துக்குள்ள
கிடந்தே தவிக்கிறது..//

தினம் தினம் வாழ்வு
போராட்டத்தில் ஆரம்பித்து
போராட்டத்திலே முடிகிறது..//

எழுதியவர் : (8-May-23, 10:48 pm)
பார்வை : 45

மேலே