என்னவனே -சகி

என்னவனே

உன் மீது
எவ்வளவு சினம்
கொள்கிறேனோ அவ்வளவு
காதல் உள்ளது....

நீ எனக்கானவன்..

எனக்கு மட்டுமே
உயிரானவன்.....

உன் அன்பு
எனக்கு மட்டுமே
சொந்தம் என்பதில்
மிக மிக
சுயநலவாதி நான்....

வெறுப்பும் கோபமும்
உன்னிடம் முழுமையாக
காட்டி விடுவேன்....

உனக்கு சமாதானம்
செய்ய தோன்றவில்லையா???

பைத்தியம் பிடிக்க
வைத்து விட்டாய்...

நீ உன் உண்மையான
காதல் மட்டுமே மருந்து....

இந்த நொடி
உன் மடியில்
தலை சாய்க்க ஏங்குகிறேன்...

நீ என் இன்னொரு
தாயடா...

தவறு செய்தாலும்
தலை கோதி
ஆறுதல் தா....

உன் தீராத காதலில்....

என் துடிக்கும்
இதயம் நீயடா...

உன் அன்பும் ஆறுதலும்
இல்லையெனில் மண்ணில்
மறைந்து போவேன்....

அழும் என்
விழிகளை கேள்

உன்னை காண
தவிக்கும் என்
இதய துடிப்பை
கேள்.....

உன்னையே
சுற்றி வரும்
என் எண்ணங்களை கேள்...

நீ
நீ
நீ

மட்டுமே உண்மையாக
எனக்கு வேண்டும்....

இவ்வரிகளை கண்டால்
உன் வரிகளை தூது விடு....

எல்லாம் மறந்து
புது காதலர்களாக
இன்று பிறந்து
இறக்கும் வரை
இருவரும்
இணை பிரியாமல்
இருப்போம்.....

என் வேண்டுகோள்
எல்லாம் நீ என்றும்
என்னவாகவே உண்மையான
காதலை பரிசாக கொடுக்க வேண்டும்.....

உன் பதிலுக்கு
காத்திருக்கும்
உன் மனைவி....

இவை வரிகள்
அல்ல மாமா...

உன்னவளின் வலிகள்....

I love you..... ❤️❤️❤️❤️
I miss u Mama ❤️❤️❤️❤️❤️

நீ என்னவாக
வருவாய் என்று
காத்திருப்பேன்....

எழுதியவர் : சங்கீதா (9-May-23, 5:24 pm)
சேர்த்தது : சங்கீதா
பார்வை : 831

மேலே