தொடுவானம் தொடு

காத்திருக்கும் காலம் கரைந்தோடிக் கண்களும்
பூத்துவிடச் செய்யும் புரி.
*
புரிந்துணர் வில்லாப் பொதுமனிதர் தம்மைப்
புரிந்தொதுங்கிப் போவாய் பொறுத்து
*
பொறுமையைச் சாய்க்கும் புயற்கோப முற்றோர்
சிறுமதிக் கில்லைச் சிறப்பு
*
சிறப்பொடு வாழச் செதுக்கிய பண்பின்
பிறப்பிட மாதல் பெரிது
*
பெரிதெனும் மானம் பிறர்தர வாங்கற்
குரியதிலை நெஞ்சிற் குறி
*
குறிக்கோ ளிலாதவர்க் கூற்றை முழுதாய்
அறியா தொழுகலே ஆப்பு
*
ஆப்பிழுத்த வானர மாகிடும் துன்பத்தைக்
கூட்பிட் டழைத்தல் சுசும்பு
*
குசும்புக்காய் செய்யும் குற்றங்கள் உன்னை
விசும்பச்செய் தற்குள் விரட்டு
*
விரட்டிய போதும் விரைந்துனைச் சேரத்
துரத்துவார் விட்டுத் தொலை
*
தொலைவுள வானம் தொடுகிற வேகக்
கலைபயின் றுய்திரு காத்து

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (15-May-23, 2:32 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 131

மேலே