காதல் கொண்ட கண்ணீர் துளிகள் 555

***காதல் கொண்ட கண்ணீர் துளிகள் 555 ***


உயிரானவளே...

கண்டதும் உன்மீது
காதல் கொண்டேன்...

உன்னிடம் காதலில்
என்னையே கொடுத்தேன்...

காலதே
வனின் விளையாட்டு
நீ என்னை பிரிந்து செல்ல...

உன்மீது
எனக்கு கோபமில்லை...

கோபம்தான்
காலதேவன்மீது...

என்னைவிட்டு தொலைதூரம்
நீ சென்ற போதும்...

என் நினைவுகள் எல்லாம்
உன்
னை சுற்றியே இருக்கிறது...

உன்னை naan
நினைக்கையில்...

என் விழி வெள்ளம்
பெருக்கெ
டுத்து ஓடுகிறது...

உன் மீதான என் அன்பினை
கண்ணீர் துளிகளே உணர்த்தும்...

கண்டதும் காதல்
கொண்ட இதயத்திற்கு...

பிரிந்ததும் மறந்துவிட
மட்டும் மனம் வரவில்லை...

காதலை
மறக்க.....


***முதல்பூ .பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (16-May-23, 5:45 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 361

மேலே