இதயம் களவாடி சென்றவளே 555

***இதயம் களவாடி சென்றவளே 555 ***


என்னவளே...


ஜன்னலோர
தென்றல் சுகம்தான்...

ஜன்னலோர புயலோ
சோகம் தான்...

என்னருகில்
நீ இருந்தால் சுகம்...

உன்னருகில் நான் இல்லை
என்றால் சோகம்தான்...

நான் தவறவிட்ட பொருளை
எடுத்து சென்றவள் நீதான்...

தெரிந்தும் உன்னிடம் மீண்டும்
வாங்கிக்கொள்ள மனமில்லை...

கண்களால் பார்த்து
உன்னை நேசிக்கவில்லை...

இதயத்தின் அன்பால்
உன்னை நேசித்தேன்...

நீ
நீயாகவே இருந்திருந்தால்...

நானும்
பௌர்ணமியாய் இருந்திருப்பேன்...

வசந்தமாய்
என் இதயத்தினுள் வந்தாய்...

அமாவாசை இருளை போல
நீ சென்றதும் என் வாழ்வு...

நேரில்
நீ வருவதில்லை...

நித்தம் நீ வருகிறாய்
என் கனவில்...

கண்களை திறக்கும் போது
அருகில் நீ இல்லாதது...

இதுதான் நரகமோ
என்று தோன்றுதடி...

எப்போது வருவாய்
என்னைத்தேடி நீ.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (17-May-23, 5:36 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 312

மேலே