முயன்று பார்

இடியாத வானம் உண்டோ
இயலாத காரியம் உண்டோ
முடியாத கரை உண்டோ
முயலாத வெற்றி உண்டோ
தோல்வி என்பது சூழும் கடல் நீர்
வெற்றி என்பது ஆழ்கடல் முத்து
மூழ்கி முயல வேண்டும்
கடலை கண்டு திரும்பிய யாவர்க்கும்
வாகையின், வாசம் கூட கிடைக்காது
முங்கி சிப்பிடியுடன் போராடி முத்துத்தெடுப்பவனே
மணக்க மணக்க வாகை சூடியவன்
பேரிகை சூழ முரசு முழங்க போருக்குபோறவனை விட
மேனி முழுதும் குருதி வழிய
கூர்மை பார்வை விழி மடிய
ஊன்றிய கால்கள் எஜமானின் வார்த்தை மறக்க
சுழன்ற கரங்களில் வெற்றியை பெற்று வருபவனே
நிலை கண்ட வெற்றியாளன்
போரும் போராடும் வாழ்வும் ஒன்றே
முயன்றால் உனக்கே முடி
வென்றால் நீயே அரசன் !!
-இந்திரா

எழுதியவர் : இந்திரா (16-May-23, 7:49 pm)
சேர்த்தது : இந்திரஜித்
Tanglish : muyanru paar
பார்வை : 293

மேலே